news-tamil-logo

3/16/2026, 1:55:36 PM

news-tamil-logo
more
Home news 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த ரத்த மாதிரி
tv

Also Watch

tv

Read this

5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த ரத்த மாதிரி

உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

Posted on: Mar 16, 2026 11:06 AM

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விளாத்திகுளம் மாணவி வழக்கு தொடர்பாக, 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது என்று, உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி பயங்கரம்
தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி, விளாத்திகுளத்தில் 12 ஆம் வகுப்பு சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று, மார்ச் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

ஐந்து பேரிடம் டிஎன்ஏ மாதிரி
அப்போது அரசுத் தரப்பில் கூறியதாவது:
ஆய்வக பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு சந்தேகத்துக்குரிய மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்கு இடமானவர்களிடம் டிஎன்ஏ மாதிரி பெறப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
சரியான முறையில், விசாரணை சென்று வருகிறது. பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது.

விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவல்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்

0
1 min agoshare
DMP Dharna








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved