அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் அயோதுல்லா அலி காமேனி நிராகரித்துள்ளார். இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றய டிரம்ப் "ஈரானுடன், அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான் சுப்ரீம் தலைவர், ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து, அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல என்றும் அது ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல் எனவும் கூறியுள்ளார்.