இலங்கையில் காளியம்மன் கோவிலுக்குள் புகுந்த சிறுத்தைக் குட்டியை, வனத்துறையினர் மீட்டு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில், சிறுத்தைக் குட்டி புகுந்ததை பார்த்து பீதியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.