ஐபோன் வரிசையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் இன்று உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது. இது வழக்கமான ஐபோன் மாடல்களை காட்டிலும் அதிக மாற்றங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக வெறும் 5.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்டு மிக மெல்லியதாக காட்சியளிக்கிறது. அதோடு, வட்டமாக அல்லாமல் நீள்வட்ட வடிவிலான கேமரா வடிவமைப்பை கொண்டது. சாம்சங் நிறுவனத்தில் உள்ளதைப் போன்று ஓஎல்இடி திரை கொண்டுள்ளதால் முந்தைய மாடல்களை விட 30% அதிக பிரகாசத்தை தரும் என சொல்லப்படுகிறது. மேலும் பின்புறம் 48 மெகா பிக்சல் கேமராவும், முன்பக்கம் 24 மெகாபிக்சல் கேமராவும் கொண்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் 89 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.