Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 12:33 PM
By: Manigandan Raja

சூப்பர் கார் :
டால்பினின் வேகத்தை மிஞ்சும் வகையில், நீருக்கடியில் பயணிக்கும் உலகின் முதல் சூப்பர் காரை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
மூன்று பேர் பயணிக்க கூடிய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த சூப்பர் காரின் மூலம் 300 மீட்டர் ஆழத்தில் மணிக்கு 11.5 மைல்கள் செல்ல முடியும். 54 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved