துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் உதயநிதிஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலத்தில், முதலமைச்சரை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.