சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோ ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.