கனமழை காரணமாக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். மேலும், புதுச்சேரி,காரைக்காலிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.