தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் தான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மகளிரை கவுரவிக்கும் நிகழ்வு என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய சுய உதவிக் குழுக்கள், அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.