சட்ட விரோத கிட்னி விற்பனை புகாரில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் மோகனின், ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடந்த இந்த சட்டவிரோத கிட்னி விற்பனை தொடர்பான வழக்கில் இடைத் தரகர்களான ஆனந்த் மற்றும் மோகன் ஆகிய இருவரை போலீசர் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமின் கோரி மோகன் தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் சட்டவிரோத கிட்னி விற்பனையை அரசு எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளாது என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையும் பாருங்கள் - தமிழகத்தை கொதிக்க வைத்த சம்பவம், ஐகோர்ட் அதிரடி உத்தரவு | KidneyTheft Case | High court