மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 202 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 85 ரன்கள் அடித்தார். தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.