தான் மட்டும் பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் விராட் கோலியை இவ்வளவு விரைவாக ஓய்வு பெற விட்டிருக்க மாட்டேன் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். விராட் கோலிக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்கி இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்திருப்பேன் என தெரிவித்தார். மேலும் இந்திய அணி தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், எனவே மீண்டும் பழைய மாதிரி டெஸ்ட் அணியை கொண்டு வந்து விட்டு பின்னர் ஓய்வு பெறுங்கள் என்று கூறி விராட் கோலியை தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன் எனவும் ஸ்ரீகாந்த் கூறினார்.