Also Watch
Read this
By: Manigandan Raja

டி20-ல் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய பேட்ஸ்மேன்கள் :
டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோகித், சஞ்சு சாம்சனை தொடர்ந்து தற்போது அபிஷேக்
சர்மாவும் இணைந்து உள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் இந்த ஆண்டில் 6 வது முறையாக ரன் ஏதும் அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார்.
ரிஷப் பந்தை கட்டியணைத்து அன்பை பொழிந்த கோயங்கா :
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த லக்னோ கேப்டன் ரிஷப் பந்தை, அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கட்டிய ணைத்து அன்பை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த போட்டி யில் லக்னோ தோல்வி அடைந்ததால் இதே கோயங்கா ரிஷப் பந்துடன் வாக்குவாதம் செய்தது பேசுபொருளாக மாறியது.
தோனி தற்போது அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி தற்போது அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

காயத்தில் இருந்து தோனி மெதுவாக தேறி வருவதாகவும் அவர் முழுமையாக உடற்தகுதி பெறச் சிறிது காலம் ஆகும் எனவும் ஆர்சிபி உடனான போட்டியின் போது கேப்டன் ருதுராஜ் தகவல் தெரிவித்தார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேச்சு :
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததாக தாம் தான் காரணம் என சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் கவலை தெரிவித்தார். போட்டி முடிந்ததற்கு பிறகு பேசிய அவர், பேட்டிங்கில் மோசமான தொடக்கத்திற்கு பிறகும் 200 ரன்களை கடந்தது தமக்கு ஆச்சரியமாகவே உள்ளது என்றார்.
ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து அசத்திய டிம் டேவிட் :
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி வீரர் டிம் டேவிட், ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் உள்பட 30 ரன்கள் அடித்து அனைவரும் மிரள வைத்தார்.

குறிப்பாக கடைசி சிக்சரில் 106 மீட்டர் தூரம் வரை பறந்து சென்ற பந்து மைதானத்தை விட்டு வெளியேறியதை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved