Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களில் இருந்து விலகல் :
நடிகர் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் மட்டுமே விலகுவதாகவும், விரைவில் புதிய படங்களுக்கான அப்டேட்டுகளுடன் திரும்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனுஷை பார்க்கும் போதெல்லாம் தந்தை நியாபகம் வரும் :
விக்னேஷ் சிவன் கூறியதாவது, தனுஷ் மீது தனக்கு மிகுந்த பாசம் இருந்ததாகவும், அவருடன் பல இனிய நினைவுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அவர் தனது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர காரணமான முக்கியமான நபர்களில் ஒருவராக தனுஷை குறிப்பிட்டார்.

தனது தந்தை இறந்த தினம் (ஜூலை 28) தான் தனுஷின் பிறந்தநாளாக இருப்பதால், அவரை பார்க்கும் போது தந்தையை நினைவுபடுத்துவதாகவும் உணர்ச்சி பூர்வமாக கூறினார். முன்பு இருவருக்கும் மிக நெருக்கமான உறவு இருந்ததாகவும், Velaiyilla Pattathari காலத்தில் இரண்டரை ஆண்டுகள் சேர்ந்து பயணம் செய்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஆனால் தற்போது இருவரும் பேசிக்கொள்ளாத நிலை ஏற்பட்டிருப்பதை மிகப்பெரிய இழப்பாகவே அவர் பார்க்கிறார்.
‘காளிதாஸ் 2’ படத்திற்கு கலவையான விமர்சனம் :
பரத் நடித்துள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி:
அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மம்மூட்டி கலந்து கொண்டு அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved