சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 422 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.