அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 50 ரன்களும், கமில் மிசாரா 46 ரன்களும் எடுத்தனர்.