news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ரோகித், சஞ்சுவின் மோசமான சாதனையை முறியடித்த அபிஷேக்
tv

Also Watch

tv

Read this

ரோகித், சஞ்சுவின் மோசமான சாதனையை முறியடித்த அபிஷேக்

அபிஷேக்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

தல தோனியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து :

தமிழ் புத்தாண்டை ஒட்டி சிஎஸ்கே வீரர் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹேப்பி தமிழ் நியூ year என வாழ்த்து கூறிய தோனியின் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை அதிகரிப்பு :

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 73 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சீசனை விட 10 சதவிகிதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 19.42 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. ரன்னர் அப் அணிக்கு 9.71 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளுக்கு தலா 5.60 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் :

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஓவர்களை சரியான நேரத்திற்குள் முடிக்காமல் தாமதப்படுத்தியதாக 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், நடுவரின் அறிவுறுத்தலை மீறியதாக ஆர்சிபி வீரர் டிம் டேவிட் டுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மாவுக்கு கையில் காயம் :

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா..? என்பது சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது கையில் காயம் ஏற்பட்டதால், பாதியில் வெளியேறினார். இந்நிலையில் கைப் பகுதியில் ஸ்கேன் எடுக்க உள்ளதாகவும், அதனடிப்படையில் விளையாடுவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ரோகித், சஞ்சுவின் மோசமான சாதனையை முறியடித்த அபிஷேக் :

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா படைத்துள்ளார்..! நடப்பாண்டில் மட்டும் 18 போட்டிகளில் விளையாடிய அவர், 7 முறை ரன்கள் எதுவும் அடிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

Related Link
குறைந்த வயதில் 4,000 ரன்கள் அடித்த முதல் வீரர்

குறைந்த வயதில் 4,000 ரன்கள் அடித்த முதல் வீரர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
1 hr 12 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved