Also Watch
Read this
Posted on: Nov 24, 2025 12:42 PM
By: Web Team

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ”ரைசிங் ஸ்டார்” ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை தட்டிச் சென்றது. தோஹாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியும் 125 ரன்கள் மட்டுமே அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய வங்கதேசம் அணி வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் சுலபமாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved