ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாளுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மற்ற பெண்களுடனும் இதே போன்ற தொடர்பில் இருந்துள்ளது தனக்கு தெரியவந்துள்ளதாகவும் கூறினார். இது குறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளாதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண், தன்னிடம் அவருடனான சாட்கள், ஸ்கிரீன் ஷாட்டுகள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதாரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : இந்திய அணி டி20 WC வென்று ஓராண்டு நிறைவு..