ராகுல் டிராவிட்டை ஒப்பிடுகையில் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் அடங்கிய குழு வித்தியாசமனது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரோகித், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் குழுவின் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தாலும் தனக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாக கூறினார்.