பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி, வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற உள்ளது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் விளையாட உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் வங்காளதேசம் எப்போதுமே சிறப்பாக விளையாடும் என்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.