பயிற்சியை துவங்கும் CSK : ஐபிஎல் 2026 சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் முதல் வாரத்தில் பயிற்சியை துவங்க உள்ள நிலையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை சென்னை வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாவலூரில் உள்ள பயிற்சி அகடாமியில் மார்ச் முதல் வாரத்தில் பயற்சியை துவங்க உள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு அந்த அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. Related Link மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?