news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் சாதனை
tv

Also Watch

tv

Read this

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் சாதனை

Sanju Samson

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டி :

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் பல்லோவ் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் விக்டர் 61-வது நிமிடத்திலும், பிரான்சிஸ்கோ 78-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில் ஆட்ட நேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சென்னை-டெல்லி போட்டியை பார்த்து மகிழ்ந்த முதல்வர் :

தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியினை கண்டு ரசித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாம்சன் செஞ்சுரியை பார்த்தாலும், தன்னுடைய ஃபேவரெட் தோனியை மிஸ் பண்ற ஃபீலிங்கை avoid பண்ண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜேமி ஓவர்டனின் அசாத்தியமான பந்துவீச்சு :

சென்னை வீரர் ஜேமி ஓவர்டனின் அசாத்தியமான பந்துவீச்சை பார்த்து சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜேமி ஓவர்டன், சென்னை அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் சாதனை :

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் பதிவு செய்தார். 52 பந்துகளில் 14 ஃபோர்கள், 3 சிக்சர்கள் என 102 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்காகவும் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார்.

பின்னர் 56 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்ற சென்னை வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Related Link
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 34 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved