வரும் நவம்பரில் தொடங்கும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளென் மெக்ராத் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தங்கள் அணி மீது தமக்கு அதிக நம்பிக்கை உள்ளதாகவும், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும்போது, அது இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதில்லை என்ற புள்ளிவிவரமும் உள்ளதாக க்ளென் மெக்ராத் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறும் அஸ்வின்? அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கோரிக்கை?