ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கஜகஸ்தானில் நடைபெற்ற காலிறுதியில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் இந்திய அணிக்கு ஒரு பதக்கம் உறுதியானது.