Also Watch
Read this
By: Web Team

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 334 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 551 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 65 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்சல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved