Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 03:53 AM
By: Web Team

14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்று 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சாம்பியனுக்கான இறுதி போட்டியில் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது.
இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved