Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி மீது வழக்குப்பதிவு :

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்.சி மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை எஸ்.எஸ். காலனி புனித செபஸ்தியார் சர்ச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுந்தர். சி கழுத்தில் அதிமுக துண்டுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
மத வழிபாட்டுத் தளத்தில் கட்சி அடையாளங்களுடன் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் விதியை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் வாழ்த்து :

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை நிலை நிறுத்தியவர் அம்பேத்கர் என தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எளியவர்களுக்கு அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர் என்றும், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம் எனவும் கூறியுள்ளார். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டம் :

தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் அல்ல என்றும், திமுகவிற்கு தான் தமிழகம் அவுட் ஆப் கண்ட்ரோலாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதுவரை திமுக ஆட்சிக்கு தொடர்ந்து வந்தது இல்லை என்றும், இந்த முறையும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்காது எனவும் திட்டவட்டமாக கூறினார்.
கே.வி.குப்பத்தில் நடைபயிற்சியின் போது வாக்கு சேகரிப்பு :
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் நின்று கொண்டிருந்த அரசு மகளிர் விடியல் பயண பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் அமர்ந்திருந்த பெண்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved