விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டின் நோக்கத்தையே திசைதிருப்பி விட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பேசிய அவர், அனைத்து கட்சிகளுக்கும் விடுத்த அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசி மாநாட்டின் காரணத்தை சிதைத்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.