சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்திய பாஜக அரசு மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும், உபத்திரம் செய்யாமலாவது இருக்க வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.