பீகார், ஹரியானா மட்டுமல்லாமல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரிலும் பெருமளவில், வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில், பானர்பனி பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, வாக்குத் திருட்டு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும், அதனை ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு இதில் நேரடி தொடர்புள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, அதற்கான ஆதாரங்களையும் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.இதையும் பாருங்கள் - ஏன் எதிர்க்கிறோம்? அது ஒரு இடியாப்ப சிக்கல் - முதல்வர் வெளியிட்ட வீடியோ | CM Stalin Video