நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர், வரும் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.