news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வைரல் ஆன விஜய், திரிஷா
tv

Also Watch

tv

Read this

வைரல் ஆன விஜய், திரிஷா

திருமண நிகழ்வில் விஜய் உடன் திரிஷா

114

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay tirisha

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தவெக தலைவரும் நடிகருமான விஜய், நடிகை திரிஷா உடன் ஒரே காரில் வந்து பங்கேற்ற நிகழ்வு, பேசு பொருள் ஆகியிருக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சை
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது விஜய் உடன் த்ரிஷா ஒரே காரில் நிகழ்ச்சிக்கு சென்று, வந்தது குறித்து பல தரப்பட்டவர்களும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

முழு நேர அரசியலில்...
’ஜன நாயகன்’ திரைப்படத்துக்குப் பிறகு, திரைத்துறையில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் விஜய் களம் இறங்கியுள்ளார். எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் தோறும், நிர்வாகிகள் சந்திப்பு எனும் மாநாடுகளை நடத்தி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பா.ஜ.க. தலைவர் பேச்சும் சர்ச்சையும்
இதனிடையே, விஜய் குறித்த தனிப்பட்ட வாழ்க்கையை, நடிகையுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது சர்ச்சையாகி இருந்தது. பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகை தரப்பிலும், வழக்கறிஞர் மூலமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தமது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

விஜய் உடன் திரிஷா
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், திரிஷா உடன் சென்னையில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரே காரில் வந்து, பங்கேற்றனர். ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், இருவரும் ஒரே நிற ஆடை அணிந்தும் வந்திருந்தனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவை வைரலான நிலையில், இந்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.

வெற்றிப்பட ஜோடி
நடிகர் விஜய், திரிஷா இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

Related Link
''விஜய்க்கும் நடிகைக்கும் தொடர்பு''

''விஜய்க்கும் நடிகைக்கும் தொடர்பு''

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 12 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved