news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்க வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்க வலியுறுத்தல்

பாப்பாபட்டி, மதுரை

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுரை ஜனநாயகன்

சில காட்சிகளை நீக்க வலியுறுத்தல் :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எச்.வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எடுக்கப்பட்டு கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்.

திரைப்பட தணிக்கை காரணமாக வெளிவருவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில் தமிழக சட்டமன்றம் 2026 தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு.

முழு திரைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவியது இது தமிழகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது., இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்த படக்காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

படக்காட்சி ஆரம்பிக்கும் போது பாப்பாபட்டி கிராமத்தில் ஜாதி பிரச்சனை காரணமாக மூன்றாவது தேர்தலை புறக்கணித்தாகவும் அதன் பின்பு காவல் அதிகாரி கிராம மக்களை பார்த்து ஓட்டு போட அழைத்ததாகவும் அதற்கு அந்தக் காட்சியில் நடித்தவர்கள் தேர்தலில் ஓட்டு போடவர்களை கைகளை வெட்டியதாகவும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது அடித்ததாகவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் உண்மைக்கு புறம்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காட்சிகளை நீக்க கோரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில்.

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் பி.கே. மூக்கையாத்தேவர் சிலை அருகில் பாப்பாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாபட்டி, பகாத்தேவன்படடி, பேயம்பட்டி மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கவும்.

படத்தில் இயக்குனர் எச்.வினோத் மற்றும் நடிகர் விஜய் இருவரும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், அரசு தலையிட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Link
உணவக ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்

உணவக ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
8 hrs 46 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved