Also Watch
Read this
By: Manigandan Raja

வளமான, ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் - பிரதமர் :
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் :

2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்காக விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் விருதுகளை பெற தகுதியானவர்கள்.
வங்கதேசத்துக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையர் :

வங்கதேசத்துக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர், விரைவில் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் இருந்து 13.19 லட்சம் இந்தியர்கள் வருகை :
மேற்காசியாவில் இருந்து இதுவரை 13 லட்சத்து 19 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலை காரணமாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இதுவரை 13 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தலைநகரில் திடீரென மாறிய வானிலை :

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை திடீரென வானிலை மாறி பலத்த சூறாவளிக் காற்றோடு, புழுதிப் புயலும் வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved