news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இதுவரை கண்கள் காணாத பேரழகு - அசத்திய நாசா
tv

Also Watch

tv

Read this

இதுவரை கண்கள் காணாத பேரழகு - அசத்திய நாசா

யாரும் தொட முடியாத உச்சத்தில் RISK எடுத்து சாதனை

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பசிஃபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது ஓரியன் விண்கலம். 10 நாள் ஆய்வை முடித்துக் கொண்டு நிலவில் இருந்து ஆர்டெமிஸ்-2 குழுவினர் திரும்பி உள்ளனர்.

நிலவுக்கு மிக அருகில்...
சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்டெமிஸ்-2 எனும் விண்கலம், 4 விண்வெளி வீரர்களுடன் கடந்த 2ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து, நிலவுக்கு மிக அருகில், அதாவது 6,545 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று, மனித கண்களால் இதுவரை பார்த்திராத பூமியின் பேரழகு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இந்த ஒவ்வொரு புகைப்படங்களும் பூமியின் அழகை ரசிக்க வைத்தது.

வரலாற்று சாதனை
இதனை தொடர்ந்து, 10 நாட்கள் நிலவை ஆய்வு செய்த பிறகு, ஆர்டெமிஸ்-2 திட்ட வீரர்கள், பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி உள்ளனர். இதன்படி, அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு, வீரர்கள் நிலவுக்கு வெற்றிகரமாக சென்று விட்டு திரும்பி, சாதனை படைத்துள்ளனர்.

இதேபோல், இந்த ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் மூலம் பூமியிலிருந்து, 4,06,778 கி.மீ. தொலைவை அடைந்து உள்ளனர். இதன் மூலம், 1970ஆம் ஆண்டு அப்பல்லோ-13 திட்டத்தின் 4,00,171 கி.மீ. என்ற சாதனை தூரத்தை ஆர்டெமிஸ்-2 திட்டம் முறியடித்துள்ளது. இந்த வரலாற்று சாதனை மனித குலத்தின் விண்வெளி ஆய்வில், புதிய மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது.

குவியும் பாராட்டுக்கள்
50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு சென்று வந்த விண்வெளி வீரர்களின் சாதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து கூறியுள்ளார்.

ஆர்டெமிஸ்-2 குழுவின் விஞ்ஞானிகள் விக்டர் குளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா கோச், ஜெர்மி ஹேன்சனுக்கு நாசா வாழ்த்து தெரிவித்து உள்ளது. பத்து நாட்கள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாகவும் பாராட்டு தெரிவித்து உள்ளது.
மனதார நாமும் பாராட்டுவோம்...

Related Link
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 33 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved