படத்திற்கு சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்பி, 96 பட ஹீரோயின் ஜானுவிடம், ப்ரஸ் மீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டார் யூடியூபர் ஒருவர். பேட்டியளிக்கும் அறையில் ஒற்றைப் பெண்ணாக இருந்து, கூச்சலிட்டு கத்திய ஆண்களுக்கு மத்தியில், கூலாக பதிலளித்த கௌரி கிஷனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூடவே அந்த யூடியூபரின் கேள்வியால் புது சர்ச்சை வெடித்திருக்கிறது. ’க்ரைம்’ திரில்லராக உருவாகியிருக்கும் ’அதர்ஸ்’ திரைப்படம், நவம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 22 வயதே ஆன இளம் நடிகர் ஆதித்யா மாதவன், 96 பட ஹீரோயின் கௌரி கிஷன், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடிச்சிருக்கக் கூடிய இந்த திரைப்படத்த அபின் ஹரிஹரன் இயக்கியிருக்காரு. படத்துக்கு ஜிப்ரான் இசையமைச்சிருக்கக் கூடிய நிலையில, கடந்த சில நாட்களுக்கு முன்னால பாடல்களும் வெளியாகுது. படத்தில இடம்பெற்ற “ஒரு பார்வை பார்த்தவனே” அப்டீங்கிற காதல் பாடல்ல நடிகை கௌரி கிஷன, ஹீரோ தூக்குற மாதிரி ஒரு காட்சி இடம்பெற்றிருக்குது. இப்போ இது சம்பந்தமா கடந்தமுறை நடந்த ப்ரஸ் மீட்ல யூடியூபர் ஒருத்தர் மோசமான கேள்வி ஒன்ன முன்வச்சிருக்காரு. “ஹீரோயின அக்கா மாதிரின்னு சொல்றீங்க. ஆனா படத்துல தூக்கிட்டுலாம் சுத்துறீங்க. என்ன வெயிட் இருந்தாங்க?” அப்டீன்னு நடிகர் ஆதித்யா மாதவன் கிட்ட கேக்குறாரு. இந்த கேள்விய அன்னைக்கு பெரிசா எடுத்துக்காத நடிகை கௌரி கிஷன், நேற்றைய தினம் நடந்த ப்ரிவ்யூ ஷோ பிரஸ் மீட்ல ரொம்பவும் நிதானமா அந்த யூடியூபர் கிட்ட தன்னோட கண்டனத்த பதிவு பண்ணுறாங்க. அதுல உஷ்னமான அந்த யூடியூபர், “இது journalism, அது ரொம்பவும் இண்ட்ரஸ்டிங்கான கேள்வி. மோடிய பத்தியும் ட்ரம்ப் பத்தியுமா உங்க கிட்ட கேக்க முடியும்?” அப்டீன்னு இன்னும் மோசமா எதேதோ கேட்கிறார். அவருக்கு துணையா நாலு யூடியூபர்ஸ் ஒன்னு கூட ஆரம்பிக்கிறாங்க. அதுல ஒருத்தர் செம்ம ஹைலட்டா போயி, மேடம் அவரு அன்னைக்கு அந்த கேள்விய சிரிச்சிட்டேதான் கேட்டிருந்தாரு. க்யூட்டா இருந்ததுனால கேட்டோம் அப்டீன்னுலாம் சொல்ல, கௌரி கிஷன் கோபத்தோட உச்சத்துக்கே போய்ட்டாங்க. ஒருகட்டத்துல கௌரி கிஷன பேச விடாம, “அன்னைக்கு முதல்ல உங்களுக்கு கேள்வியே இல்ல, பி.ஆர்.ஓ. கேக்க சொன்னாரு”ங்கிற மாதிரியெல்லாம் தனிப்பட்ட முறையில அவங்கள டார்கெட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இவங்களோட அட்ராசிட்டிய தனியொரு பொண்ணா இருந்து பாத்துட்டு இருந்த கிஷன், சும்மா நச்சு நச்சுன்னு பதிலடி கொடுக்குறாங்க. என்னதான் எமோஷனலானாலும், வார்த்தைகள்ல கௌரி கிஷன் தடுமாறாம பேசுனது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கு. “முதல்ல அந்த கேள்வி எனக்கு காமெடியாவே தோணலங்க. ஸ்டாப் நார்மலைஸிங் பாடி ஷேமிங். அது ஒரு stupid ஆன கேள்வி. அவங்க வெயிட் என்ன? எப்பிடி தூக்குனீங்க? அப்டின்னு சொல்லி நீங்க பாலியல் ரீதியான தாக்குதல நடத்துறீங்க. நீங்க பண்ணுறது பேரு journalism இல்ல. என்னோட திறமைய பத்தி பேசுங்க. வெயிட்ட தெரிஞ்சுட்டு என்ன செய்ய போறீங்க. என் வெயிட்டுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்?. வெயிட்ங்கிறது என்னோட விருப்பம்.ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் கேக்குறேன். ஒரு ஹீரோவ பாத்து இதே கேள்விய கேப்பீங்களா?” அப்டீன்னு மானாவாரியா கேக்குறாங்க. கூடவே, “இந்த ரூம்ல இத்தனை ஆண்கள் இருந்தும் இப்பிடி வேடிக்க பாக்கிறீங்களே” அப்டீன்னு தன்னோட ஆதங்கத்த போட்டு உடைக்கிறாங்க. இந்த வீடியோ இணையத்துல வேகமா பரவக் கூடிய சூழல்ல, பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவையும், அந்த யூடியூபர்க்கு கண்டனத்தையும் தெரிவிச்சுட்டு இருக்காங்க. இந்த நிலையிலதான், யூடியூபர்களுக்கு பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு மாநில பாஜக துணைத் தலைவர் குஷ்பு பாராட்டு தெரிவிச்சு பதிவு ஒண்ண போட்டிருக்காங்க. அதுல, நடிகையிடம் கேட்ட அதே கேள்விய உங்க வீட்டு பெண்கள பாத்து நாங்க கேக்கலாமா? அப்டீன்னும் தன்னோட கண்டனத்த பதிவு செஞ்சிருக்காங்க. இதையும் பாருங்கள் - Journalism-ங்கிற பேர்ல Rowdyism கௌரி கிஷன் அட்டாக் | ActorGouriKishan | GouriKishanNews