6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.