ஈரான் தலைநகர் Tehranல் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக திரும்பிய திசையெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. Tehran பகுதியில் இந்தாண்டு தாமதமாக பனிப்பொழிவு தொடங்கினாலும், பல இடங்களில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. இதனால் பல இடங்களில் வென்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நிலையில், பொதுமக்கள் பனியில் நடனமாடி மகிழ்ந்தனர்.