தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.