சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தை உலகமே புகழ்ந்து பாராட்டி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்தார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்தியதை தொடர்ந்து, இனி எந்த சர்வதேச போட்டிகளும் சென்னையில் நடத்தமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.