அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இருந்தார்.