அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஞ்சிடாது என பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒயின், விஸ்கி மற்றும் பிற மதுபானங்களுக்கு 200 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், தாங்கள் யார் என்பதை காட்டவேண்டியது முக்கியமாகிறது என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்தார்.