இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டி20 போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது. இதனால், வெளியேறிய சாம்சனுக்குப் பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார். மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சாம்சன் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.