பயிற்சியின் போது தென் கொரிய போர் விமானங்கள் பொதுமக்கள் பகுதியில் தற்செயலாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது புதிய ஆயுத மோதலைத் தூண்டக்கூடும் என வடகொரியா கூறியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. பயிற்சியின் போது இரண்டு தென் கொரிய ஜெட் விமானங்கள் கிராம பகுதியில் தவறுதலாக எட்டு குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் 29 பேர் காயமடைந்தனர்.