Also Watch
Read this
அதிமுக கூட்டணியில் போட்டியிடும், அன்புமணி தலைமையிலான பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதிமுக கூட்டணியில்...
இதுதொடர்பாக, அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேட்பாளர்கள் விவரம்:
1. பெரம்பூர் - கவிஞர் ம.திலகபாமா
மாநிலப் பொருளாளர், பா.ம.க.
2. தருமபுரி - முனைவர் சௌமியா அன்புமணி
தலைவர், பசுமைத் தாயகம்
3 விருத்தாசலம் - மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்
மாநில செயலாளர், பாட்டாளி மகளிர் சங்கம்

4. சேலம் மேற்கு - மு.கார்த்தி
மண்டல ஒருங்கிணைப்பாளர், பா.ம.க.
5. பென்னாகரம் - பாடி வெ.செல்வம்
மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.
6. போளூர் - சி.ஆர். பாஸ்கரன்
மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், பா.ம.க.

7. திருப்போரூர் - வழக்கறிஞர் கே.பாலு
செய்தித் தொடர்பாளர், பா.ம.க. - தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை
8. ஜெயங்கொண்டம் - க.வைத்தி
மாநில இணைப் பொதுச் செயலாளர், பா.ம.க.
9. சேலம் வடக்கு - எஸ். சதாசிவம்
மாவட்ட செயலாளர், பா.ம.க.
10. விக்கிரவாண்டி - சி.சிவக்குமார்
மாவட்டச் செயலாளர், பா.ம.க.

11. சோளிங்கர் - வழக்கறிஞர் க. சரவணன்
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
12. மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ.பழனிச்சாமி
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
13. உத்திரமேரூர் - பெ.மகேஷ்குமார்
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
14. ரிஷிவந்தியம் - அ.ப. செழியன்
மாவட்டச் செயலாளர், பா.ம.க.

15. காட்டுமன்னார் கோயில் (தனி) - மருத்துவர் அன்பு சோழன்
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved