news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்
tv

Also Watch

tv

Read this

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

அதிரும் தேர்தல் களம் 2026

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் 

சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


Related Link
இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன், TV, பிரிட்ஜ், வாஷின் மெசின் வாங்கலாம்

இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன், TV, பிரிட்ஜ், வாஷின் மெசின் வாங்கலாம்

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், தமது வேட்பு மனுவை வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



Related Link
பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டி

பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். செல்லும் வழியெங்கும் கருப்பு சிவப்பு கொடியுடன் திரண்டு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தவெக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல்
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், தமது வேட்பு மனுவை வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நான்கு நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மும்முரமாக, வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனுவை சுவிதா இணையதளத்தில் பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

5 பேருக்கு மட்டுமே அனுமதி
தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், மனு தாக்கல் செய்ய வருவோரின் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

4 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கலுக்கு அவகாசம்
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மனுத் தாக்கல் நாட்கள் - மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6
விடுமுறை நாட்கள்
மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 1 - வங்கி விடுமுறை
ஏப்ரல் 3 - புனித வெள்ளி
ஏப்ரல் 5 - ஞாயிறு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூப்பன் கேட்டது யார்? சீமான் கேள்வி

11
54 mins agoshare
seeman in karaikudibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved