திருவண்ணாமலை மாவட்டம் பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர், மாணவியை தனியாக வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்தியதாக ஆடியோ வெளியான நிலையில், மாணவியின் உறவுக்கார இளைஞர்கள் ஆசிரியரை தனியாக அழைத்துச் சென்று முட்டி போட வைத்து மூக்கை உடைத்த சம்பவம் அரங்கேறியது.ஆசிரியரை போக்சோவில் கைது செய்த போலீசார், தாக்குதல் நடத்திய இளைஞர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.