ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-6 (8-6), 6-7 (1-7), 6-4 என்ற செட் கணக்கில் லேனரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோத உள்ளார்.