Also Watch
Read this
Posted on: Mar 17, 2025 01:42 AM
By: Srini Vasan

உலகளாவிய கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அந்த நாடு 4 ஆயிரத்து 347 கோடி ரூபாயை முதலீடு செய்ய தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகளாவிய இந்த கிரிக்கெட் 'லீக்' போட்டியில், 8 அணிகள் பங்கேற்கும் என்றும், டென்னிஸ் கிராண்ட்சிலாம் போன்று இதை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள எஸ்.ஆர்.ஜே நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தொடர்ந்து பேசி வருவதாக தகவல் வெளியகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தொழில் முறை லீக்குகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேனி டவுன்செனட் தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved